கள ஆய்வுகள்

 

நீலகேசி - ஆசீவகவாதச் சருக்கம்

 

நீலகேசி குக்குடமா நகரினின்றும் சம தண்டம் சென்று அங்கு

ஆசீவகர்களைச் சந்தித்து அவர்களுடைய சமயக் கோட்பாடு

களைத் தெரிந்து கொள்ளும் பகுதியிலிருந்து இங்கு பொருள் கூறப்பட்டுள்ளது .

 

667 ஈண்டி யிருந்த விலிங்கியர் தங்கட்கு

மாண்ட துகிலல்குல் மாத ரிதுசொல்லுங்

காண்டற் கினிதே கடிமலர்ப் பூம்பள்ளி

யீண்டுறை வாரிவர் யாவர்கொ லென்றாள் .

 

அங்கிருந்த இலிங்கியரை ( துறவியரை ) நோக்கி இந்த நறு

மணம் மிகுந்த பள்ளியில் வாழ்பவர் யார் என அழகிய துகிலுடுத்த

பெண்களிற் சிறந்தவளான நீலகேசி கேட்டாள் .

 

 

668 காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற்

பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன்

பூரண னென்பான் பொருவறக் கற்றவ

னாரணங் கன்னாட் கறிய வுரைக்கும் .

 

அப்போது , ஒப்பீடில்லாத கல்வி நிலையை உடையவனும்

( செயலுக்கு ) காரணம் என்பதொன்றை விரும்பாத துறவிகளுடைய

கூட்டத்தில் மிக்க அறிவை அடைந்து , எல்லோரிலும் முதன்மை

யாக விளங்குபவனுமான பூரணன் என்பவன் , தெய்வப்பெண்

போன்ற நீலகேசிக்கு நன்கு புரியும்படி கூறுகின்றான் ,

 

 

669 புயலிருங் கூந்தற் பொலங்கொடி யன்னா

யயலியர் தாமல்ல வாசீ வகர்கள்

வியலிடத் தியாரும் வியக்குந் தகையர்

மயலறு காட்சியிம் மாதவ ரென்றான் .

 

 

முகிலனைய கருமையான

கூந்தலை உடைய பொற்கொடி

போன்றவளே ! இங்கிருப்பவர்கள்

இங்கிருப்பவர்கள் வேறு மதத்தைச் சார்ந்தவர்

தாபதரிருடிதடம் பெயராகும் ”

 

670 ஆத்தனு நூலும் பொருளு நிகழ்ச்சியும்

பாத்தன சொல்லப் பயம்பெரி தாகலி

னோத்துரை யேயிங் சூரையென் றுரைத்தனள்

சாத்திரம் யாவையுந் தன்னிக ரில்லாள் .

 

ஒப்பில்லாதவளாகிய நீலகேசி , பூரணனை நோக்கி , உனது தலை

னையும் அவனது ( மத ) நூலையும் அது கூறும் பொருளையும் ,

( அப்பொருட்களின் ) நிகழ்ச்சிகளையும் பகுத்துக் கூறினால் , அத

னால் விளையும் பயன் பெரியதாகும் என்றாள் .

 

 

671 என்றலு மற்கலி தானே யிறையினி

யொன்பது வாங்கதிர் நூல்யா முடையன

மன்பெறு நுண்பொரு ளைந்தியல் பாயவை

யென்ப நிகழ்ச்சியுங் காழ்ப்பா டெனச்சொல .

 

 

எமது தலைவன் மற்கலி, எமக்குரிய நூல் ஒன்பது கதிர் .

நிலைபெற்ற ( நுண்பொருள்கள் ) ஐந்து . அவை என்றுமே இயல்

பாகவே உள்ளன . அவற்றின் நிகழ்ச்சி ஆழ்தலும் ( காழ் ) மிதத்தலு

மாகும்.

 

 

672 அறிந்தா னிறைவ னனா குதலாற்

செறிந்தான் பெரிதுஞ் செறியா துரைப்பி

னெறிந்தா னனைய வியல்பா குதலான்

மறிந்தான் றடுமாற் றகத்தே மயங்கி யெனின்

 

 

ஆத்தன் " என்று நீலகேசியில் கையாளப்பட்ட சொல்

அருகர் நிலையை அடைந்தவன் , தலைவன் என்ற இருபொரு

ளையும் தரும் .

 

எமது தலைவன் முழுமையும் அறிந்தவனாதலால் வாய்

பேசாது அடங்கியிருக்கின்றான் . அவன் அவ்விதம் வாய்பேசாது

அடங்கி இருக்கவில்லையெனின் , உயிரினங்களை வாளால் எறிந்து

கொன்ற தன்மையை அடைவான் 5 . ( அதன் பயனாக ) மயக்குற்று

மீண்டும் பிறப்பினை , எய்துவான் .

 

 

673 உரையா னிறைவ னுணலு மிலனாய்த்

திரையா னரையான் றெரிவில் லுருவம்

வரைய னகை வானிடுவில் லனையன்

புரையா லறிவிற் புகழ் பூரணனே .

 

எம்முடைய இறைவன் பேசுவதுமில்லை . உண்பதுமில்லை

அவன் உடலில் ( முதிர்ச்சியிலான ) சுருக்கமுமில்லை . நரைய

மில்லை . அவன் உடல் ( அழகு ) ( ஓவியனால் ) எழுதப்படாத

வானவிற் போன்றது . ( எமது இறைவனான ) பூரணன் குற்றமில்

லாத அறிவினாலான புகழ் உடையவன் .

 

 

674 அடங்கல் குறிக்கோண் முதலா யினவாய்க்

கிடந்த கதிருட்கிளந்த பொருணாந்

தொடங்கி யுரையாந் தொகையா குவதே.

யுடங்கே யணுவைந் துருவா யுளதே .

 

அடங்கல் , குறிக்கோள் முதலியனவாகக் கூறப்பட்ட நவகதி

ருள் சொல்லப்பட்ட பொருள்கள் பற்றி நாம் தொடக்கத்திலிருந்து

கூறமாட்டோம் . ஒன்றாகத் தொகுத்துக் கூறுவோம் . ஒருங்கு சேர

நோக்கின் அணுக்கள் ஐந்து . அவை உருவம் உள்ளன.

 

675 நில நீ ரெரிகாற் றுயிரின் னியல்பும்

பலநீ ரவற்றின் படுபா லவைதாம்

புலமா கொலியொன் றொழிய முதற்காஞ்

சலமா யதுதண் மையையே முதலாம் .

 

 

நிலம் , நீர் தீ , காற்று , உயிர் என்ற இவ்வணுக்களின் இயல்பு

பலதன்மையன. அவற்றிற்குரிய பாலை ( குணம் ) நோக்கின் , தெளி

வாகத் தெரிந்து கொள்கின்ற ஒலி ஒன்றினைத் தவிர ஏனையவை ,

முதலில் கூறப்பட்டதற்கு ( அதாவது மேலே கூறப்பட்டவற்றுள்

முதலாகக் கூறப்பட்ட நிலத்திற்கு ) உண்டு. நீரிற்குரிய பால்களுள்

முதலாயது தண்மையாகும் .

 

 

676 எறித்தன் முதலா யினதீ யினவாஞ்

செறித்த லிரையோ டிவை காற்றினவா

மறித்தல் லறிதல் லவைதா முயிராங்

குறித்த பொருளின் குணமா லிவையே

 

தீயினது பால்களாகச் சுடுதல் முதலியவற்றைக் கூறலாம் .

அறைதலும் , இரை தலும் , காற்றினுடைய பால்களாகும் . அறிதலும்

அறிவித்தலும் , உயிரினது பால்களாகும் . மேற்கூறியவைதான் முற்

கூறிய பொருள்களின் குணமாகும் .

 

 

677 அணுமே யினவைந் தவைதா மனைத்துங்

குணமே யிலவாங் குழுவும் பிரியு

முணன்மே யினுமுள் புகுதல் லுரையேங்

கணமே யெனினும் மொருகா லமிலை .

 

 

 

 

 

 

அணுக்கள் ஐந்து . அவையாவும் எல்லாக் குணங்களையு முடை

யன அல்ல . ( அவை ) குழுவாகச் சேரும் , பின்னர் பிரியும் . ஒருபொரு

ளில் இவை அடங்கினும் ( அதாவது ஒரு பொருளில் பல அணுக்கள்

உள் அடங்கினாலும் ) அவை ஒன்றனுக்குள் ஒன்று உள்ளே நுழை

வதில்லை . கணம் என்று கூறினும் ஒரு காலம் என்ற கோட்பாடு

இல்லை.

 

 

678 இவையே பொருள்க ளிவற்றினியல்பும்

சவையே யறியச் சிலசாற்றுவன்கேள்

சுவையே யுடையம் மெனநீ யிகழல்

லவையே பிறரா லழிதற் கரிய .

 

மேற்கூறியவைகளே பொருள்களாகும் . இவற்றின் இயல்பைப்

பற்றி இந்த அவையிலுள்ளோர் அறியும்படிச் சிலவற்றைக் கூறு

வேன் . நீ நாம் சுவையே உடையவர்களென ( புலன் வழிப்பட்டவர்

- கள் ) எம்மை இகழாதே . முற்கூறிய பொருள்கள் ஏனையோரால்

அழிப்பதற்கு முடியாதவை .

 

 

679 அண்ணலு நூலும் பொருளு நிகழ்வு மிவையெஒL

மெண்ணினு மேனை பெழத்தினு மிக்கிருந்தவர் முன்

கண்ணினு மன்றிக் கருத்தினும் வேறெனக்

காட்டலும்பண்ணலங் கொண்ட சொல்லானவை

 பேர்த்தும் பகர்ந்தனளாய் வற்றின் படு பாலவைதாம்

 

பூரணன் இவ்விதமாகத் தமது இறைவன் , தமது நூல, அவை

கூறும் பொருள் , அவற்றின் நிகழ்ச்சி , இவை பற்றிக் கூறியதும் ), இனி

மையான சொற்களையுடையவளாகிய நீலகேசி , காண்டலளவை

பால் மட்டுமன்றிக் கருதலளவையாலும் அவை வேறுபட்டவை

சான்பதைக் காட்டுவதற்காக அவற்றை மீண்டும் ஒருமுறை கூறி

னாள் .

 

 

580 முற்ற வறிந்துரை யாதவன் மோனாந் திருந்தனனேற்

செற்றம் பெரிது முடையனர் சீவன்க டம்மொ

டெல்லா

மற்ற முடையவர் சொல்லின வாகம மன்மையினாற்

பெற்ற வகையென்னை பேதா யதனைப்

பெயர்த்தனவே .

 

 

(உன்னுடைய தலைவன் ) முற்றும் தெரிந்தும் , ஒன்றுமே பேசா

திருப்பானேயாகில் , அவன் எல்லா உயிர்கள் மேலும் கோபம் உடை

யவனாவான் . ( முற்று முணர்ந்தவர்கள் எல்லாருமே பேசாது

விட்டுவிட்டால் பேசுபவர்கள் குற்றமுடையவர்கள் . அவர்கள் முற்

முணர்ந்தவர்களல்ல என்பது பொருளாகின்றது . ) குற்றம் உடை

யோர் உரைப்பதை ஆகமமாகக் கொள்ள முடியாது . எனவே நீ

உன் தலைவனின் நூலை எவ்வகையில் பெற்றாய் ? அதைக் கூறு

என்றாள் .

 

 

681 ஒக்கலி யோகலி யென்றிரு தெய்வ முரைத்தனவேன்

மற்கலி யார்போ லறிந்தன வாயிற் செறிந்தனவாம்

தக்கில வேயறி யாதன சொல்லுத றத்துவத்தை

யிக்கலி யாள ருரைத்தவு மேதமெனாய்பிறவோ .

 

( நீலகேசியே தொடர்ந்து பேசுகிறாள் . ) நீ ஒக்கலி ஓகலி என்ற

தெய்வங்கள் உங்கள் சமய ஆகமங்களை உரைத்தன என்று கூறி

னால் , அத்தெய்வங்கள் மற்கலியாரைப் போல முற்றிலும்

அறிந்தவர்களாயின் , வாயைத் திறந்து பேசமாட்டார்கள் ( அல்லவோ ? ) அறியா

தவர்கள் கூறும் தத்துவம் தகுதியில்லாதது . ( அவ்விதம் தகுதியில்லா

தவர்கள் கூறுகின்ற தத்துவத்தை நீ ஏற்பின் ) , இக்கலியுகத்திலுள்

ளவர்கள் கூறுகின்றனவற்றையும் குற்றமுள்ளன என நீ கொள்ள

மாட்டாய் ( போலும் ) .

 

 

682 அறிந்தா னறிந்தன தான்சொல்லி னார்வ .

சினத்தனனா

யெறிந்தா னனையதோ ரேதத்தை பொதுமங்

வேதத்தினான்

மறிந்தா னகன்றடு மாற்றத் தகத்தெனின்

மாண்புணர்ந்தாய்

செறிந்தாங் கிருக்கிற்பி னீயுஞ்சிற் றாத்தலன

பாகிற்றியே ,

 

மெய்ப் பொருளை அறிந்தவர்கள் , தாம் அறிந்தவரைச் சொன்

னால் ( தான் சொல்வதை ; னயோர் ஏற்கவேண்டும் என்று )

 ஆர்வத்தால் எழும் கோபத்திற்குட்பட்டு , உயிர்களை வாளால் வெட்டிய

ஒருவன் பெறும் குற்றத்தை அடைவர் . அக்குற்றத்தின் காரணமாக

ஒருவன் இவ்வுலகத்தில் மீண்டும் பிறப்பான் என்று நீ கூறினாயா

னால் , அந்த மாட்சிமையை உணர்ந்த நீயும் , வாய் பேசாதிருந்தால்

ஒரு சிறு தலைவன் ( மதத் தலைவன் ) ஆகிவிடுவாயல்லவா ?

 

 

ஆனால் இன்று நீலகேசியிற் கிடைக்கும் ஆசிவகவாதச் சருக்கப்

பகுதியில் , ஒக்கலி , ஓகலி பற்றிக் கூறியது போலவும் , அதைக்

கேட்டு நீலகேசி பதிலளிப்பது போலவும் உரைக்கப்படுகின்றது .

இவ்விதம் முன் தொடர்பில்லாது நீலகேசியின் பதில்கள் அமை

வது இரண்டு தன்மைகளைச் சுட்டுகின்றது . ஒன்று இன்றைய

நிலையில் காணப்படும் ஆசீவகவாதச் சருக்கத்தில் சிலபாடல்கள்

விடுபட்டுப் போயிருக்கலாம் . இரண்டு , இவ்வித

தங்களைத் தம் நூலில் எழுதும் ஆசிரியர்கள் முன்னர் ஒருவர்

கூறியது போல எண்ணிக் கொண்டு , அதற்கு நூலில் வரும் பாத்

திரத்தைப் பதில் கூறவைப்பது . இவ்விதம் வினாக்களை ஊகித்

துக் கொண்டு பதிலை எழுதிச் செல்லும் பான்மை அக்கால

இலக்கிய வெளிப் பாட்டு நுண் திறன்களில் ஒரு வகைப்பாடா

கலாம் .

 

653 ஆத்த னறிந்தன யாவையுஞ் சொல்லல

னாய்விடினிச் சாத்தனும் யானு மவன்றனிற் சால

விசையுடைய நாத்தனை யாட்டியோர் நன்மைகண் டாலு

நினக் குரைத்து

மீத்தன முண்டு மிருமைக்கு மேதமி லம்பிறவோ.

 

 

அந்த (உங்கள் ) தலைவன் ( மற்கலி ) தனக்குத் தெரிந்தவற்றை

யெல்லாம் கூறாது விடுவானாகில் , ( இங்கே உள்ள ) இந்தச் சாத்த

னும் , நானும் அவனை விட மிகவும் உயர்ந்தவர்கள் . (ஏனெனில்

நாம் , உலகில் ) காணும் நன்மைகளையெல்லாம் நாவினை அசைத்து

உனக்குக் கூறுகின்றோம் . ( இன்னும் நாம் பிறருக்கும் ) கொடுத்து

( நாமும் ) உண்கின்றோம் . இம்மைக்கும் மறுமைக்கும் குற்றம் செய்

யாதிருக்கின்றோம் அல்லவா ?

 

384 வானிடு வில்லின் வரவறி பாத வகையனென்பாய்

தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனா

மீனடைந் தோடும் விடு சுட ரான்கதிர் வீழ்புயன்

மேற்மானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே .

 

நி உனது தலைவன் வானவிற் போன்று தோன்றியவகை தெரி

பாதவன் எனக் கூறுகின்றாய் . அவன் ( ஐம் ) பொறிகளும் , உடம்பும்

உடையவன் ஆதலால் ( அவனும் ) பிறப்புடையவனே . ( அதாவது

ஜாதகனார் ) . ( மேலும் ) , அதனுடைய ( -- அதாவது வானவில்லின்

தோற்றம் பற்றிய ) உண்மை யென்னவெனில் , விண்மீன்களுடன்

சேர்ந்துலாவும் சூரியனின் ஒளிக்கதிர்கள் முகிலின் மீது விழும்போது

வான வில் உண்டாகின்றது .

 

585 முற்ற வறிந்தனன் யானென்று மோனங்கொண்

டேயிருந்தானற்ற மகலவென் றானீ யறிந்தமை யாதினினாம்

பெற்ற வகையெனப் பேசின்மை யாலெனிற்

பிள்ளைகளும் மற்றிம் மரமு மலையுமம் மாண்பின வாம்பிறவோ .

 

 

(உன் தலைவன் ) “ எல்லாம் தெரிந்தவன் நானென்றும் , குற்றம்

ஏற்படா திருப்பதற்காக வாய் பேசாதிருந்தான் என்றும் ” , கொண்

டால் ( அவனுடைய கொள்கைகளை ) எவ்விதம் அறிந்தாய் ?

" அவன் பேசாதிருந்ததனால் நான் உணர்ந்து கொண்டேன் என்று

( நீ ) கூறினால் , ( பேசாதிருக்கின்ற ) குழந்தைகள் , மற்றும் மரம் , மலை

எல்லாம் ( கூட ) முற்றுமுணர்ந்த தன்மையுடையவர்கள் அல்லவா ?

 

 

686 முடக்கு மெனினு நிமிர்க்கு மெனினுந்தன் மூக்குயிர்த்து

நடக்கு மெனினு மிருக்கு மெனினுந்த னல்லுறுப்பி

னடக்கு மியல்பல்ல னன்னவற் றார்வத்த னாகுமன்றி

யுடக்கு மிவையில்லை யேலுயிர் தானுண்மை யொட்டுவனோ.

 

உன் தலைவன் , “ முடக்குதல் , நிமிர்தல் , மூச்சுவிடுதல் , நடத்தல் ,

இருத்தல் முதலிய ( செயல்களையும் ) செய்வான் ” என்றால் , அவன்

தன்னுடைய நல்ல உறுப்புக்களை அடக்கும் வல்லமையுடையவன்

அல்லன் . . ( இன்னும் அவன் ) அச்செயல்களைச் செய்வதற்கு

விருப்புடையவனாகவே கொள்ளப்படுவான் . அன்றியும் , இவை

யெல்லாம் அவனிடத்தில் இல்லை என்றால் , அவனுக்கு உயிர்

உண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் .

 

687 நிலப்பாலு நீர்ப்பாலுந் தீப்பாலுங் காற்றின்

புலப்பாலு நெட்டுயிரின் போக்கில்லாப் பாலுஞ்

சொலற்பால வல்லாத சொல்லுதலால் யானு

மலப்பா தொழியேனிவ் வாசீ வகனை

யருகிருந்தார் தாமறிய வாசீ வகனை .

 

 

இவன் ( பூரணன் ) நிலத்தின் பால் , நீரின்பால் , காற்றின் கண்

தெரியும்படியாக உள்ள பால் , நெடிய உயிரின் போக்கு இல்லாத

பால் , என்று சொல்லத் தகாதவைகள் எல்லாம் சொல்லுவதால் ,

இந்த ஆசீவகனைத் துன்புறுத்தாது விடமாட்டேன் . பக்கத்தில்

உள்ளவர்கள் அறியும்படியாக இந்த ஆசீவகனைத்துன்புறுத்தாது

விடமாட்டேன்

 

688 வண்ணாதி யெல்லாம் வகுப்பின் னிலப்பாலா

நண்ணாத மூன்றிற்கு நன்பால் பிறவா கிக்

கண்ணாதி யாலவற்றைக் காணப்பா டில்லையா

யெண்ணாதே யிந்தியக்கோ ளெய்தாமை வேண்டும்

எனைத்தும் பெறப்பாடு மில்லாத வேண்டும் .

 

வண்ணம் முதலானவற்றை ( நிறம் , மணம் , சுவை , தொடுதல் )

வகுத்தால் அவை நிலத்திற்குரிய பால்களாகும் . ( அப்படியாயின் )

ஏனைய அணுக்களுக்குமுரிய பால்கள் வேறாக இருக்கவேண்டும் .

அவை கண்ணுக்குப் புலப்படாதும் இருக்க வேண்டும் : ( அத்து

டடன் ) வேறெந்த வெகையாலும் இவை பெறமுடியாதிருக்க வேண்டும் .

 

689 நீர்ப்பாலுந் தீப்பாலு நில்லா வளிப்பாலும்

பேர்ப்பாலே பற்றிப் பிறப்பிறவா நீ பெருக்கி

யோர்ப்பியாதுஞ் செய்யா துரைத்தா யரைத்

தபையிற் கூர்ப்பியாது மின்றி நின் கோளழியு மன்றே

கொணர்ந்துநீ யைந்தென்ற கோளழியு மன்றே .

 

நீ , நீர்ப்பால் , தீப்பால் , நில்லாத காற்றின் பால் எனப் பெயர்களைக்

கொண்டு ( மேலும் ) வேறு வேறாகப் பெருக்குகின்றாய் .

( அவை பற்றி ) எந்த எண்ணமும் கொள்ளாது உரைக்கின்றாய்

இவ்விதம் உரைக்கின்றமையால் , உண்மையெதுவுமின்றி

கோட்பாடு அழிந்து விடும் . நீ கொண்டு வந்து ( நிலை நாட்டும் )

ஐந்து பொருட்கள் என்ற கொள்கையும் ( கூட ) அழ்ந்து விடும்.

 

690 பொருடாமி வைந்தொழியப் போத்தந் துரைப்பா

யிருடாமி வைந்தனு ளெக்கூற்ற தாமோ

விருடாமி வைந்தினுளு மெக்கூற்று மில்லே

லருடாழ்ந்து நீயிருப்ப தியாதின்பா லாமோ

அணுமயமாங் கந்தங்க டாமனந்த மன்றோ ,

 

பொருள் ஐந்து (என்று கூறுகின்றாய் ) . இந்த ஐந்தனுள் இருள்

எந்தக் கூற்றினுள் அடங்கும் ? அறிவு வழி இதற்கு விடையளிப்

பாயாக ! “ இருள் இந்த ஐந்தனுள் எந்தக் கூற்றினுள்ளும் அடங்

காது என்று கூறின் , நீ இப்போது அருள் நிலை குன்றியிருக்கின்

றாயே , எது எந்தப் பாலினைச் சார்ந்தது ? அணுக்களாலான கந்

தங்கள்  எண்ணற்றவையல்லவா ?

 

691 பலவாக நீசொன்ன பாலெல்லாந் தம்முட்

கலவாவா யப்பொருளே யாதலையுங் கண்டா

லுலவாதோ வொற்றுமையும் வேற்றுமையு மென்றாற்

சலவாதி யொன்றுஞ் சமழலையே கண்டாய்

சமத்திடை யொன்றுஞ் சமழலையே கண்டாய் .

 

 

( மேலும் ) நீ சொல்கின்ற பால்கள் எல்லாம் தம்முள் ( ஒன்றுள்

ஒன்று ) கலவாதிருந்து கொண்டே , அப் பொருள் களாகின்றன என்ற

தன்மையை நோக்கும்போது அது ஒற்றுமையும் வேற்றுமையும்

ஆகாதோ ! பொய் வாதம் புரிகின்ற நீ சிறிதும் வெட்கப்பட மாட்

டாய் ! அடக்கமுடைமையால் ( நீ ) வெட்கப்படமாட்டாய் ( போலும் ) .

 

692 பாறாம் பலவாகிப் பாலாகு மப்பொருளே

வேறாது மில்லை யெனவே விளம்புவாய்

நீறாக நின்ற நிலப்பால் பெறவேலா

நாறா வகையெனக்கு நன்குரைக்கல் வேண்டும்

நலிந்தாற் பிறபொருட்கு நாட்டலே வேண்டும் .

 

பால்கள் பலவகையாகி , அப்பொருளுடன் கூடும் போது , அவை

அப்பொருளாகவே ஆகின்றன ; ( அவை ) வேறுபடுவதில்லை என்

கின்றாய் . அப்படியானால் ஒன்றாகிவிட்ட நிலப்பாலை மீண்டும்

பெறமுடியாது . எனவே , நாலாகி ( நான்கு பால்களாக ) நிற்கின்ற

வகையை எனக்கு நன்கு எடுத்துக் கூற வேண்டும் . அதைக்

கூறாது . தோற்று விட்டாயானால் மீதிப் பொருள்கள் பற்றிய கொள்

கையை நிலை நாட்ட வேண்டும் !

 

 

693 இன்றேய தாயினிவைபா லிவைபொருள்க

ளென்றே பலவா வெடுத்துரைப்ப தென்செய்யக்

குன்றோ மலையோ குவடோ வடுக்கலோ

வன்றோவ தன்றாலஃ தியாப்பாதல் வேண்டும்

அவையவையே சொன்னாலஃ தியாப்பாதல்

வேண்டும் .

வெவ்வேறு தன்மையுடைய அணுக்கள் ஒருங்கு சேரும் .

ஆனால் ஒன்றனுள் ஒன்று நுழைந்து ஒன்றாகக் கலக்கமாட்டா என்று

ஆசீவகர்கள் கூறும் கூற்றின் படி பார்த்தால் , எவ்விதம் ஒன் றனுடன்

ஒன்றுகலக்காமல் ஒரே தன்மைத்தான பொருள்

உண்டாகலாம்

என்ற கேள்வி நீலகேசிக்கு உண்டாகியுள்ளது .

எனவே அதை ஒற்றுமையும் வேற்றுமையும் உடையதெனக் கொள்கிறாள் .

 

அப்படியில்லையென்றால் ,

பொருளும் பாலும்

ஒன்றே என்று கூறுவாயானால் , இவை பால் இவை பொருள்

என்று பல படப் பிரித்துக் கூறுவது எத்தகையது ? மலை , குவடு ,

அடுக்கல் என்பவை குன்றிற்குப் பாலாகச் சொல்ல முடியுமா ?

( முடியாது ) . அது முடியாது என்றால் அதுவே ( முதற் கூறிய

பொருளும் பாலும் ஒன்றேயென்ற) உன் கொள்கைக்கும் விதியாக

வேண்டும் . பொருளும் பாலும் ஒன்றென் றால் அது ( மலை, குவடு .

அடுக்கல் ஆகிய ) இவற்றிற்கும் விதியாக வேண்டும் ,

 

694 நோயில்லை வாழி கடவுளெனவுரைத்தா

னாயுநோ யின்மையினேர்த் தாய வழியொருநாட்

உயினும் வெய் :பநோய் சேர்தலையுங் காண்டு நீ

சாயினுந் தத்துவத்தைச் சாராதாயன்றோ

தடுமாற்றக் காழ்ப்பாடுந் தானுளதே யன்றோ .

 

ஒருவன் , ஒரு தடவை நோயில்லை என்று கூறி , நோயில்லாது

வாழ்ந்து கொண்டிருந்த போது ஒருநாள் , நெருப்பிலும் கொடிய

நோய் அவனைச் சேர்கின்றது என்பதைக் கண்டு , நீ ( உனது

கொள்கை ) தகர்ந்தாலும் , உண்மையை அறியமாட்டாய் ( அதாவது

பொருள்கள் மாறுபடாது என்று கூறினாய் . ஆனால் ஒருவனுக்கு

வரும் நோயிலிருந்து பொருள்கள் மாறலாம் என்ற கொள்கையும்

பெறப்படுவதால் பூரணன் கொள்கை பயனற்றுப்போய் விடுகின்றது ) .

மேலும் , உழன்று நிற்றல் , தாழ்தல் , மிதத்தல் ஆகியவைகளும் இருக்

கின்றன அல்லவா ? ( இங்கும் பொருள்கள் மாறுபடுவது உணர்த்தப்

படுகின்றது .)

 

 

695 கடுங்கதிரோன் மீதாறக் காணாக்கோ ளெல்லாம்

படும்பொழுது பினுந் தம்பயனே செய்யு

நெடுங்காலம் பல்பிறவி நின்றன வெல்லா

மொடுங்காதே மேய்ந்துண் டுழிதரலே வேண்டு

முதவாத வார்தலையு மொட்டலே வேண்டும் .

 

ஞாயிற்றின் ஒளி மேலோங்கும் போது நமது கண்ணுக்கும் புலப்

படாத கோள்கள் எல்லாம் , அச்சூரியன் மறைகின்ற காலத்திலும் ,

உதிக்கின்ற காலத்திலும் , அவற்றின் தொழில்களைச் செய்து நிற்ற

லைக் காண்கின்றோம் அல்லவா ? ( அப்படியாயின் ) நீண்டகால

மாகப் பல்வேறு பிறப்புக்களையும் எடுத்து அப்பிறப்புகளின் செய்த

செயல்களெல்லாம் மறைந்து போகாது ( இப்பிறப்பிலும் ) உலவி ,

உண்டு சுழன்று கொண்டிருத்தல் வேண்டும் . இப்பிறப்பிலும் அதே

போல் முற்பிறப்பில் அழுக்குகளை உண்ணும் பிறப்பெடுத்திருந்தால்

தேவையற்ற அழுக்குகளையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமல்

லவா ( மேலும் தொடர்ந்து நீலகேசி உரைக்கின்றாள் ) .

 

 

696. எப்பாலுந் தான்கெடா வில்லனவுந் தோன்றாவென்

றொப்பியாது மில்ல துரைத்தளியின் றானுண்ணும்

துப்பாய தூச்சோற்றுத் தூய்தல்லா தாழ்ந்துளதென்

றிப்பாவி செய்யு மிழிதகவி தென்னோ

விழுதைதான் செய்யு மிழிதகவி தென்னோ .

 

இங்கு பொருள்களின் இயல்பு மாறுவதில்லை எனப்

பூரணன் முன்பு கூறியிருக்க வேண்டும் , எனவே அதை எதிர்க்கும்

நீலகேசி , ஒவ்வொரு பிறப்பிலும் இயல்பு மாறாதென்றால் , வராகப்

பிறப்பில் செய்த மலமுண்ணுதல் போன்ற வேண்டாத செயல்களைப்

பின்னரும் இன்னொரு பிறப்பான மானிடப் பிறப்பில் செய்ய வேண்

டுமல்லவா ? எனக் கேட்கிறாள் . இதையே சமயதிவாகரர் தன்

உரையில்“ அனாதி வரலாற்றதாகிய ஸம்சாரம் கெடாது மறைந்து

நின்றதாயின் ஒரு காலம் மனுஷ்யனான பொழுது பூர்வ முளவாகிய

ஜனனகாரியங்களெல்லாம் காண்டல் வேண்டும் ; வேண்டவே , முன்

னொருகால் வராகமாகியும் ஜனித்தானன்றோ ? தத்ஜனன காரியமா

கிய மலபக்ஷணாதியு மிசைத்தல் வேண்டுமென்றவாறு " எனக் கூறு

கிறார் .

 

உள்ளன ஒரு போதும் கெடாது . இல்லாதவை புதிதாகத்

தோன்றமாட்டா ” என்று இவன் ஒப்புதல் இல்லாத (உரைகளை )

வற்றை எடுத்துக் கூறுவானாயின் , இவன் உண்கின்ற உணவாகிய

தூய சோற்றின் கண்ணே , தூய்மையில்லா தனவும் ,அமிழ்ந்தியி

ருக்கின்றன . இவ்விதம் இப்பாவி கூறுகின்ற இழிவு தரத்தக்க

செயலும் என்னவோ ! இந்தப் பாவச் செயலுடையோன் செய்கின்ற

இழிவான செயலும் என்னவோ !

 

 

697. நின்றீக கொண்டீக வுண்டீக தின்றீக

வென்றிவைகள் கூறி யிடுவார்க் கறம்வேண்டான்

கொன்றீகை தீதென்றுங் கொல்பாவ மில்லென்றுந்

தன்றிகை யுண்ணாதான் றான்கண்ட தென்னோ

தவத்தினுமில் வாழ்க்கை தான்கண்ட தென்னோ

 

 

இவன் நின்று கொடுங்கள் , உண்டு கொடுங்கள் , தின்று

கொடுங்கள் என்று இவை எல்லாவற்றையும் ( கூறினானே யொழிய )

அறம் செய்வோர்க்குப் புண்ணியம்உண்டாகும் என்று கூறவில்லை 19

கொன்று அறம் செய்தல் தீய செய்கை என்றும் , கொல்வதால் பாவ

மில்லையென்றும் , தனது தீமையை உணராத இவன் கண்டது

என்னவோ ! தவ ஒழுக்கத்தில் நின்று கொண்டே இல்வாழ்க்கையை

கடைப் பிடிப்பதும் என்னவோ!.

 

 

698. இல்லாது தோன்றா கெடாவுள் ளனவென்பாய்

சொல்லாயே நெய்சுடராய்ச் சுட்டிடுமா றென்றேனுக்

கல்லாந் தயிர்த்தோடி யாழ்மிதப்புச் சொல்லுதியா

லெல்லாமொன் றொன்றிற் கிடங்கொடா வன்றே

யிழிவுயர்ச்சிக் காரணமுமில்லாதா யன்றே .

 

இல்லாதது தோன்றாது . உள்ளது கெடாது என்று நீ சொல்

கின்றாய் . ( அப்படிக் கூறுகின்ற ) உன்னை , நெய் ( அதனிடத்தே

முன்பு இல்லாத ) நெருப்பாக ஆகிச் சுடுவது எப்படி என்று கேட்கின்ற எனக்கு

( விடை சொல்ல மாட்டாது ) மனங்கலங்கி , ஐயம்

கொண்டு , ஆழ்தல் மிதத்தல் பற்றிக் கூறுகின்றாய் . ( உன் கொள்

கைப்படி ) பொருள்கள் எல்லாம் ஒன்றனுள் ஒன்று அடங்கமாட்

டாது அல்லவா ?

( அத்துடன் பொருள்களின் ) கீழ் நோக்கிச்

செல்லுதல் , ( மேனோக்கி ) உயர்தல் ஆகியவற்றிற்கு உன்னால்

காரணம் சொல்ல முடியாதல்லவா?.

 

 

699 ஓட்டுங் குதிரையு மொன்றே யெனிற்குதிரை

யூட்டும் பொழுதொடுதான் புல்லுண்ணும்

போழ்தின்கானாட்டியவீதி யதிசயத்தை நீ யெமக்குக்

காட்டி யுரைப்பினின் காட்சியைக் கோடும்

கடவுள் குழாத்தார்தங் காழ்ப்பெலாங் கோடும் .

 

குதிரையின் ஓட்டமும் குதிரையும் ஒரே பொருள் என்று நீ கூறி

னால் , குதிரைக்கு உணவு ஊட்டும் போதும் அது புல்லை உண்

ணும் போதும் , அதனுடைய பல்வேறு வகைப்பட்ட நடைகளையும்

நீ எமக்குக் காட்டுவாயானால் , உன்னுடைய கொள்கைகளை நாம்

ஏற்றுக் கொள்வோம் . உன்னுடைய கடவுட் கூட்டத்தினர் கூறு

கின்ற ஆழ்தல் முதலியவற்றையும் (அதாவது ஆழ்தல் மிதத்தல் )

என்ற கொள்கையினையும் ) நாம் ஏற்றுக் கொள்வோம் .

 

700 வண்ண முதலா வுடையகுண மெல்லாம்

எண்ணுங்கா லப்பொருளே லீந்தி னிளங்காய்

கண்ணினாற் கண்ட பசுமை கனிக்கண்ணுந்

திண்ணி தாக் காட்டிற் றெருண்டாயே யென்றும்

திரிந்தொழிந்த காட்டினாற் றேவனே யென்றும் .

( அடுத்து ) நிறம் முதலிய பண்புகளைக் குறித்து நாம் எண்ணு

வோமாயின் , அப்பண்புகளும் பொருளும் ஒன்றே ( என்கின்றாய் ) . -

அப்படியானால் ஈச்சமரத்தின் பிஞ்சுக்காய்களில் நாம் கண்ட ,

பசுமை நிறத்தை அது கனியான போதும் தெளிவாகக் காட்டுவாயா

னால் , நீ தெளிந்த அறிவுடையவன் எனக் ( கூறுவோம் ) . (இன்னும் )

மாறி மறைந்த குணங்களை அப்போதுள்ள குணத்துடன் அதே

நேரத்திற் காட்டினால் நீ தேவனே என ( நாம் கூறுவோம் ) .

 

701. வட்ட முதலா வுடைய பொருளெல்லா

மொட்டிநீ யப்பொருளே யொன்றும்வே

றில்லென்பாய்

தட்ட மழித்தோடஞ் செய்தா லதன்கண்ணும்

விட்ட வடிவு விரித்துநீ காட்டாய் .

விகார மனைத்தும் விரித்துநீ காட்டாய் .

 

வட்ட முதலிய வடிவங்களையுடைய பொருள்களையெல்லாம்

ஒத்துக் கொள்கின்ற நீ அந்தப்பொருளே அந்த வடிவங்கள் என்றும்

அவை வேறு வேறானவையல்ல என்றும் கூறுகின்றாய் . அப்படியா

யின் ஒரு தட்டத்தை அழித்து ( அதையே ) ஓடமாகச் செய்தால் ,

அந்த ஓடத்திலும் ( நீ தெளிவுறக்

அதைக் காட்டவில்லை . மாறுதலடைந்த பொருள்களின் மாற்றங்க

ளையும் நீ காட்டவில்லை .

 

702. மிதப்பனவு மாழ்வனவும் வேண்டுவன்யா

னென்னிற்

பதப்பொருடா னான்கின் பன்மை முடித்தாயா

மிதப்பனவே யாழ்வன தாம் வேறியாது மில்லே

லுதப்பேனு நின்சொ லுதவலவே கண்டா

லுடனே நின் பக்க முடைத்திட்டாய் கண்டாய் .

 

நான் மிதக்கின்ற பொருள் களையும் ஆழ்கின்ற பொருள்களை

யும் பாகுபாடு செய்வேன் என்று நீ கூறினால் , பதார்த்தப்பொருள்

களுக்கு நான்கு தன்மைகளான பலவாகி நிற்கின்ற தன்

மையை ( அதாவது பொருள் , அது உள்ள இடம் , அந்தக்காலம் ,

அதன் இயல்பான பண்பு என்பவற்றை ) நீ ஏற்றுக் கொள்ளவில்லை .

மிதக்கின்றனவே ( அதாவது பொருள்களே ) ஆழ்கின்றனவுமாம் ,

அவை வேறு வேறானவையல்ல என்று நீ அழுத்தமாகக் கூறினும்

நீ கூறிய சொற்கள் உதவா திருப்பதையே நீ காண்பாய் !உன் கொள்

கையை நீயே தகர்த்து விட்டவனாகின்றாய் .

 

 

703. தொழிற்சொற் குணச்சொல் வடிவுச் சொன்

மூன்றும்

பிழைப்பில் பதமாப் பிரிவிடத்துக் காண்டு

மிழுக்கில் பொருளோ டியைத்தக்காற் சந்தி

யெழுத்தியலிற் கூட்டமு மெப்பொழுதுங் காண்டு

மிலக்கண நின்சொ லியையலவே காண்டாய் .

 

பொருள்கள் மிதக்கின்ற பொருள்கள் , ஆழ்கின்ற

பொருள்கள் எனப் பாகுபாடு பண்ணினாலும் . அவை அவ்விதம்

கொள்ளப்படமுடியாது என நீலகேசி கூறுகின்றாள் . ஏனெனில் ,

பொருள்கள் அவற்றிற்குள்ள நான்கு தன்மையால் வேறு வேறா

னவை என்று அவள் வாதாடுகின்றாள் . அவை இருக்கின்ற இடத்

தில் அவை உள்ள காலத்தால் , அவைதரும் பயனால் , அவை

கொண்ட வடிவத்தால் என நான்கு விதத்தால் வேறுபடுகின்றன .

எடுகோளாகத் தட்டத்தையும் ஓடத்தையும் எடுத்துக் கொண்டால்

தட்டம் தரையிலும் ஓடம் நீரிலும் தான் இருக்க வேண்டும் . எனவே

அவை இருக்கின்ற இடத்தால் வேறுபடுகின்றன . இன்று உள்ள

தட்டமும் நாளை கொண்டு வரப்படுகின்ற ஓடமும் ஒன்றல்ல .

எனவே காலத்தால் வேறுபடுகின்றன . தட்டம் பொருள்களை வைப்

பதற்குப் பயன்படுகின்றது . ஓடம் நீரினைக் கடந்து செல்லுதல்

போன்றவற்றிற்கு உதவுகின்றது , எனவே அவை பயனால் வேறு

தொழிற்சொல் (வினைச்சொல் ) பண்புச் சொல் , வடிவுச் சொல்

என்ற மூன்று சொற்களையும் பிரித்துப் பார்க்கும் போதும் ( அவை

பொருள் ) தவறில்லாத சொற்களாகவே காண்கின்றோம் . பின்னர்

குற்றமற்ற பொருளோடு கூடிய போதும் அவை எழுத்தியலிற் கூறப்

பட்ட சந்திவிதிகள் சேர்கப்படும் போது எக்காலத்திலும் ஒரே மாதி

ரியாக இருப்பதையும் ( நாம் ) காண்கின்றோம் 24. எனவே நீ கூறு

வது இலக்கணத்தோடு பொருந்தாதிருப்பதைக் காண்பாயாக .

 

 

704. அதுவா வதுவு மதுவாம் வகையு

மதுவாந் துணையு மதுவாம் பொழுதுஞ்

சதுவா நியதந் தனவா வுரைத்தல்

செதுவா குதலுஞ் சிலசொல் லுவன்யான் .

 

 

மேலும் , ஒரு பொருள் உண்டாவதும் , அது உண்டாகும் வகை

யும் , அது உண்டாகும் அளவும் , அது உண்டாகும் காலமும் என்று

நீ நான்காகக் கூறுவது தவறு என , நான் ஒரு சிலவற்றைக் காட்டிக்

கூறுகின்றேன் .

 

 

( இக்கூற்றைத் தொடர்ந்து நீலகேசி , ஆசீவகனின் கூற்றுக்கள்

தவறானவை என்பதை எடுகோள்களுடன் விளச்குகின்றான் ) .

தட்டம் வட்ட வடிவிலும் , ஓடம் நீண்டு உள்கோலிய

வடிவிலும் இருக்கும் . எனவே அவை வடிவால் வேறுபடுகின்றன .

இவ்வித வேறுபாடுகள் இருந்தபோதும் ஆசீவகனான பூரணன் ,

பொருள்கள் ஆழ்தல் , மிதத்தல் ஆகிய பண்புகளால் வேறுபடுகின்

றன எனக் கூறுவதால் நீலகேசி அவன் கொள்கை உதவாதவை

என எடுத்துக் கூறுகிறாள் .

 

705. அரிவை யவளாங் குழவி யவளை

யுரிய வகையா லுவந் தாங்கெடுத்தா

லரிய முழமூன் றளவாம் பொழுதும்

வரிசை யுரைத்த வருடம் மதன்பின் .

 

( மேலே நீ கூறிய நான்கு நியதிகளை நீ இவ்விதம் விளக்குகின்

றாய் என நீலகேசி பூரணனுக்குக் கூறுகின்றாள் ) 35 . அரிவைப் பரு

வத்தையுடைய பெண் என்பது குழந்தை ஆகும் நியதியாகும் .

( அதுவாம் ) அரிவைப் பருவத்தளாகிய அவளை உரிய முறையில்

வளர்த்தல் என்பது அது ஆகும் வகையாகும் ( ஆமாங்கு ) . அது

மூன்று முழமாக வளர்தல் என்பது அது ஆகும் அளவு (ஆந்துணை ) .

அப் பெண்ணின் வளர்ச்சிக்கு வேண்டியதாக உரைக்கப்பட்ட

ஆண்டுகள் ஆகும் காலமாகும் (ஆங்காலம் ) .

 

 

 

706. குழவித் திறமுந் துறவா ளவளும்

முழுவித் ததுவும் முளையா துளதா

மிழவெத் துணையு மியல்பேன் முடியா

தழிவித் திடுவேனயநீ விரையல் .

 

 

( ஓரு பொருளுக்கு அழிவுகிடையாது என நீ கூறின் அரிவை

நிலையை அடைந்தபெண் ) குழந்தையாக இருந்ததன்மையை நீத்தி

ருக்கக் கூடாது . ( அதுபோலவே ) முழுமையான ஒரு விதையானது

முளைக்காதிருக்க வேண்டும் . ( முளைத்தால் அந்த விதையும் அழி

யாது மரத்துடன் இருக்க வேண்டுமல்லவா ? ) அவ்விதம் நிகழாதபடி

யால் , உன் கொள்கையை நான் அழித்திடுவேன் . நீவிரையாதே !

 

707. முலையும் மகவும் முறுவல் லவையும்

தலையுண் மயிரும் முகிரும் முடனே

நிலையில் லமையு மிலதா மெனினே

யலையுந் நினகோ ளுடனே யெனலும் .

 

( அடுத்து, எதுவும் புதிதாகத் தோன்றாது என ஆசீவகன் கூறு

வதற்கு நீலகேசியின் மறுப்பு :-) ( ஒரு பெண் குழந்தைக்கு , அவள்

அரிவையாகுங் காலத்தே , ) மார்பகங்களும் . வயிற்றில் குழந்தையும் ,

பற்களும் , தலையில் மயிரும் , நகங்களும் , நிலையாகவே இருந்திருக்க

வேண்டும் . இல்லையென்றால் உனது கொள்கை வலுவற்றுப்போகும் .

 

 

 

 

708. உளவே யெனின்முன் னுரைத்தந் நியதங்

களவே யெனலாங் கடையா மென நீ

கிளவா தொழியாய் கிளந்த குழவிக்

களவே முழமா வவைதாம் பலவால் .

 

( மேற்கூறியவையெல்லாம் ) உண்டென நீ கூறின் , முன்னர் நீ

உரைத்த (சதுவா ) நியதங்கள் பொய்யெனப்படும் . முன்பு நீ கூறிய

குழந்தைக்கு உயர்ச்சி அளவு ஒரு முழமேயாகும் . பின்னர் அரி

வைப் பருவத்திலுள்ளவளுக்கு பல முழங்கள் அளவாகும் . இவ்வி

தம் கூறுதல் இழிவானதாகையால் நீ இந்த முறைகளை ( சதுவா

நியதங்களைக் ) கூறாதே .

 

709. உடையள் ளிவடன் னுதரத் தொருபெண்

ணடையு மவளுக் கவளவ் வகையாற்

கடையில் குழவி யவைதன் னியல்பா

நடையு மதுவே னகையாம் பிறவோ .

 

அதேபோல் இன்னொரு பெண் வயிற்றிலிருக்க வேண்டும் .

அக் குழந்தை வயிற்றில் இன்னொரு குழந்தை , அவ்வி

தமே பல குழந்தைகள் இருக்க வேண்டுமெனக் கூறி உள்

ளது கெடாது என்பதை மறுக்கின்றாள் . சமய திவாகர

முனிவர் தன் உரையில் விறகில் நெருப்பிருக்கிறது என

நீ கூறுவாயானால் அது தவறு . அங்கு நெருப்பில்லை .

நெருப்பிருந்தால் விறகே எரிந்து விடும் . நெருப்பை எழ

வைக்கத்தக்க ஆற்றல் தான் உண்டு எனக் கூறி விளங்க

வைக்கின்றாள் .

 

710. இனியாம் வகையு மிசைத்தி யெனினுந்

நனிகா ரணமாய் நடுக்கு நின்கோட்

டனிகா ரியமும் முளதேற் றவறா

முனிலா மொருவன் பொழுதும் முடிவாம் .

 

( ஆகும்வகை ஆகும் என்ற ஆசீவகன்  கொள்கைக்கு

மறுப்பு :) இனி ஆகும் வகை ( ஆமாங்காம் ) என்பதற்கு மறுப்புக்

கூறு என்று கேட்பாய் . ஆயின் , ஆகும் வகை என்பதிற் காரணத்

தால் காரியம் நிகழ்கிறது . ( நீ காரியத்திற்கு காரணம் இல்லை எனக்

கூறுடாவனாகையால் ,) உனது கொள்கை இங்கு அசைக்கப்பட்டு

விடும் .

 

( உன் கொள்கைப்படி ) தனியாகக் காரியம்

( என்று நீ கூறின் ) , அது தவறு ஆகும் . ( முன்பு இல்லாத அரிவைப்

பருவம் தோன்றாது . முன்பு இருந்த குழவிப் பருவம் கெடாது . இத

னால் உன் கொள்கைப்படி நீ இப்போது கூறுவது தவறு ) . ஆங்

காலத்து ஆம் என்ற உன் கொள்கைப்படி முன்பில்லாத ஒரு காலப்

பொழுது தோன்ற முடியாது . எனவே அரிவையாக அவள் ஆகும்

காலம் இருக்க முடியாது ) . ஆனால் இங்கு முன்பு இல்லாத ஒரு

காலப் பொழுது உண்டு . ( இது உன்னுடைய கொள்கைக்கு ஏற்ற

தல்ல ) . எனவே ஆங்காலத்து ஆம் என்பதன்படி காலம் உனக்கு

உடன்பாடாகின்றது .

 

711. நியதந் நிகழ்ச்சிந் நியதா வுரைப்ப

தயதி யெனினீ யமையுஞ் சலமேல்

வியதி யெனினு வெகுளல் விழுதை

பயதி யெனினு நினக்கோர் பயனே .

பேதாய் , ( பொருள்கள் எப்போதும் ) மாறுதலின்றி இருக்கின்றன

( என்று கூறும் நீயே ) , ( பொருள்கள் இவ்வித ) நியதியால் ஆகின்றன

என்று கூறுவது வேடிக்யைாகக் கூறுவதானால் பொருந்தும் .

( அதுவே ) பொய்யானால் அது உனக்குக் ) கேடு என நான் உரைத்

தால் , நீ கோபப்படாதே ! ( அவனுக்கு ) இதுவே ( பிறப்பிலிருந்து

உண்டான இயல்பாய குணம் என ஏனையோர் கூறின் , உனக்கு

அதனால் வரும் பயன் என்ன ?  (உயிர்கள் ).

 

712. பாலைப் பழத்தி னிறத்தன வாய்ப்பல மாட்டொடு

கண்ணாலெத் துணையு மகன்றைந்து நூறாம் புகை

யுயர்ந்து ஞாலத் தியன்றன நல்லுயி ரென்பது நாட்டு

கின்றாய் .

மாலித் துணையுள வோநீ பெரிதும் மயங்கினையோ

 

( நீ ) நல்ல உயிர்கள் , பாலைப் பழத்தின் நிறத்தினை உடையன

வாகப் , பல பக்கங்களிலும் , எல்லா வகையாலும் அகன்று , ஐந்நூறு

காதம் உயர்ந்து இவ்வுலகில் இருக்கின்றன என நிறுவுகின்றாய் .

உனக்கு இவ்வளவு மயக்கமுண்டா . நீ பெரிதும் மயக்கம் கொண்டி

ருக்கின்றாயா ?

 

713. ஒன்றினு ளொன்று புகலில் வென்ற வுயிர்

களெல்லா

நின்றன தந்த மகலமு நீளமும் பெற்றனவாய்

நன்று நீ சொல்லுதி நாந்தொக் கிருந்துழி நல்லுயிர்க

டுன்றின வென்பது சொல்லா தினியென்ன

சொல்லுதியோ .

 

உயிர்கள் ஒன்றனுக்குள் ஒன்று புகமாட்டா என்று கூறுகின்ற நீ

அதே உயிர்கள் தத்தமக்குரிய அகலம் நீளம் ஆகியன உடை

யனவாகி நிற்கின்றன எனக்கூறுகின்றாய் , நாம் தொகுதியாக

இருப்பது போல் நல்ல உயிர்களும் இருந்தன என்று

வேறென்ன கூறுவாயோ .

 

714. தானுள தாய வழியவன் றன்பா லியல்பெனலா

மூனுள தாய வுயிர்ப்பிர தேச முணர்வதுபோல்

வானுளம் போயுழி மன்னு மறிவிலை யேலதனை

நானுள தென்றுரை யேனதற் கியாரினி நாட்டு

கிற்பார் .

 

 

ஒரு பொருள் இருக்கின்ற இடத்தில் அதன் குணமும் கூடி

இருப்பது இயல்பு எனலாம் . உடம்பை உடையதாக இருக்கின்ற

( அதாவது உடம்புடன் கூடி இருக்கின்ற ) உயிர் அது இருக்கின்ற

இட அளவை உணர்த்தியிருப்பது போல் 33 , இந்த உடம்பைவிட்டு

வானில் உயர்ந்து சென்ற போது , தனது குணமாகிய அறிவுடன்

சேர்ந்திருக்க வேண்டும் . அப்படி இல்லையெனில் நான் அது இருப்

பதாகக் கூற மாட்டேன் . அதை யாரால் உண்டென்று நிலைநாட்ட

முடியும் !

 

715. ஒன்றென நின்ற வுயிர்தா னுருவித னாதலினாற்

பொன்றுந் துணையும்பல் போழெய்தும் பூசணிக்

காயினைப்போ

லின்றெனினாகம மாறதுவா மினி யவ்விரண்டு

மின்றெனிற் சால வெளிதாம் பிறவத னின்மையுமே

 

 

( நீ ) ஒன்றென்று கூறுகின்ற உயிர் , (உடம்பாகிய ) உருவம்

உடையது ஆதலினால் , இறக்கும் வரை , பூசணிக் காயைப்போல்

பலதுண்டுகளாக வெட்டத்தக்கதாகும் . அப்படியில்லையானால் ,,

அது உன் கோட்பாட்டிற்கு மாறானதாகும் . இனி , இரண்டு தன்

மைகளும் இல்லையெனில் , ( அதாவது உயிர் உடம்பு உடையது

மில்லை , உடம்பு இல்லாததுமில்லை )  , அத்தகைய உயிர் இல்லை

யென்று சொல்வது மிக எளிதாகும் .

 

716. எண்டனை யாக்கி யிடவகை யுட்பொரு ளீறு

சொல்லி

மண்டல மாக்கி மறுத்துங் கொணரு மனத்

தினையேற்

கண்டிலை நீமெய்ம்மை காழ்ப்பட்டு நின்ற கனவு

யிர்க்கெண்

ணுண்டெனி னில்லை யகன்றடு மாற்ற முலப்பின்

மைபோல் .

 

உயிர்களுக்கு எண்ணிக்கை யைக் கொடுத்து , ( அவற்றிற்குரிய )

இடத்தின் வகைகள் , ( அவற்றின் ) உட்பொருள் , ( அவற்றின் ) முடிவு

ஆகியவை கூறி , அவற்றை மண்டலமோட்சத்தின் மூலம் மீண்டும்

( உலகத்திற்குக் ) கொண்டுவரும் எண்ணக் கோட்பாடுடையவன் நீ

யாகில் , நீ உண்மையை அறிந்து கொள்ளவில்லை ( யெனத்தெரி

கிறது ) . உலகத்தில் ஆழ்தல் , மிதத்தல் ஆகியன கொண்டு நிற்கின்ற

நிறையுள்ள உயிர்களுக்கு எண்ணிக்கை உண்டாயின் , அவை

கட்கு அழிவு இல்லாதது போல் , பரந்து பட்ட பிறப்பு இறப்புகளும்

( கூட ) இல்லை .

 

717. மேற்சீர தீயோ டுயிர்காற்று விலங்கு சீராம்

பாற்சீர நீரு நிலந்தானும் பணிந்த சீரா

மேற்சீர மேற்போம் விலங்கோடு விலங்குசீர்கீ

ழாற்சீ ரவிழும் மவை யென்னினு மாவ தென்னோ ,

 

உயிரும் காற்றும் மேலே போகும் இயல்புடையன , காற்று குறுக்

காகப் போகும் இயல்புடையது பால் என்பதே சீர் ( என்பதாகும் ) .

நீரும் நிலமும் பணிந்துள்ள இயல்புடையது ( அதாவது கீழ்நோக்கி

யுள்ள தன்மையுடையது ) . மேலே போகும் இயல்புடையவை

மேலே போகும் . குறுக்காகப் போகும் இயல்புடையவை குறுக்கா

கப் போகும் , கீழ் நோக்கி விழும் இயல்புடையன கீழே விழும் என்று

நீ ( பலவாகக் கூறினாலும் ) அவற்றால் வரும் பயன் என்ன ?

 

718. தீயு முயிருந் தமக்காய திசையினாலே

போயு மொழியா திவணிற்றல் பொருத்த மன்றால்

வீயும் வகையும் வினையாகுந் திறமு மெல்லா

நீயு மவற்றை நினையாயுள வாக வன்றோ .

 

தீயும் உயிரும் மேல் நோக்கிச் செல்லும் இயல்புடையவைகள்

என்றால் அவை இங்கு ( இந்த உலகில் ) ( மீந்து ) இருத்தல் பொருத்த

மில்லாததாகும் 3. அவை இறக்கின்ற வகை , அவைதொழில் ஆற்

றும் வகை போன்றவையெல்லாவற்றையும் நீ நினைத்துப் பார்ப்பாய்

அல்லவா ?

 

 

719. தென்றை துளையத் திசைதானுறப் போய

காற்றேற்

பின்றை யொருநாட் பெயராததோர் பெற்றி

யஃதான்

முன்றை தழுவி முனிவாக்கும் வடந்தை யத்தா

வின்றைப் பகலே யிதன்மெய்ம்மை யிசைக்கிற்

றியோ .

 

மேலும் ( காற்று குறுக்காகச் செல்லும் தன்மையுடையது என்று

மாத்திரம் கொண்டால் ) தெற்குப் பக்கத்தில் ஒலியுறும்படி ( வடக்

குத் ) திசை நோக்கிச் சென்ற ( தென்றல் ) காற்று , மீண்டும் பின்பு

ஒரு நாள் பெயர்ந்து வராத தன்மையுடையதாக இருக்கவேண்டும் .

முன்தைத்திங்களைத் தழுவி வருத்தத்தைக் கொடுக்கும் வாடைக்

காற்றும் அப்படியேயாகும் . ( அதாவது மீண்டும் வராததன்மையு

டையதாக இருக்க வேண்டும் . திரும்பி வருவதால் , விலங்கு சீர்

மட்டுமன்றி , வட்டச்சீர் - வட்டமாய் வீசுந்தன்மையும் - உண்டு

என்பது பெறப்படும் ) . இன்று பகலே இதனுடைய உண்மையை

நீ எனக்கு விளக்குவாயாக .

 

720. முன்சென்று வீழுந் நிலநீரை முகிலு ணின்று

பின்சென்று பெய்யுந் துளிதானும் பெருந் தவத்தா

யென்சென்ற தெய்துந் திறந்தன்னையெனக்

குணர

நின்சென்ற வாற்றா லுரைத்தானெறி யாற்ற நன்றே .

 

 

முன் ( நிலத்தினின்றும் ஆவியாச் சென்ற நீர் ) முகில் தன்னுள்

கொண்டுபின் ( மழைத் ) துளியாகக் கீழ்நோக்கி வீழ்கின்றது .

பெருந்தவத்தையுடையவனே ! கீழ் விழும் அத்துளிகள் எவ்விதம்

மேலே செல்லும் குணமுடையனவாயின என்பதை உன்னுடைய

நெறியின் படி விளக்குவாயா ? உன் நெறியைக் கடைப்பிடிக்க அது

உதவியாகும் அல்லவா ?

 

 

721. பாலெங்கு மோதப் படுகின்ற பதப் பொருட்குக்

காலங்கள் சொல்லா யதுதானுன் கணக்கு

மென்றாற்

சீலங்கள் காத்துக் குணனின்மையைச் செப்பு

கின்றாய்

மாலிங் குடையை யதுதீர்க்கு மருந்து முண்டோ .

 

பதப் பொருள்களுக்குக் குணம் ( பால் ) கூறுகின்றாய் . ஆனால்

காலங்கள் பற்றி நீ எதுவும் கூறவில்லை . அதுதான் உனது கொள்

கையானால் , நீ , ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து , அதனால் வரும்

குணங்களைப் பற்றிச் சொல்லாதவனாகின்றாய் . நீ பித்துப் பிடித்தவனாக

இருக்கின்றாய் . அதனைத் தீர்ப்பதற்கு மருந்தும்

உண்டோ ?

 

-(தமிழகத்தில் ஆசீவகர்கள் –ரா.விஜயலெட்சுமி )