கள ஆய்வுகள்

மணிமேகலை , சமயக் கணக்கர் தந்திறங்கேட்டடகாதை

 

 

 

( மணிமேகலை வஞ்சி , மாநகரத்தில் பல்வேறு சமயவாதிகளை

யும் கண்டு அவர்கள் சமய உண்மைகளை வினவுகிறாள் . அளவை

வாதிமுதற் பூதவாதி வரை பத்துச் சமயவாதிகளிடம் அவர்கள்

கொள்கைகள் பற்றிக் கேட்டு ஒவ்வொரு சமய நெறியையும் அவை

ஏற்றதல்ல என விலக்கி , ஈற்றில் புத்த சமயத்தை ஏற்கின்றாள் .

பத்துச் சமயவாதிகளுள் ஆசீவகக் கோட்பாட்டை விளக்கும்

பூரணன் , ஏழாவதாக மணிமேகலைக்குத் தன் நெறியையும் கூறு

கின்றான் .

 

 

108 ஆசீ வகநூ லறிந்த புராணனைப்

பேசு நின்னிறையார் நூற்பொருள் யாதென

110 எல்லையில் பொருள்களி லெங்குமெப் பொழுதும்

புல்லிக் கிடந்து புலப்படு கின்ற

வரம்பி லறிவ னிறை நூற் பொருள்களைந்

துரந்தரு முயிரோ டொருநால் வகையணு

அவ்வணு வுற்றுங் கண்டு முணர்ந்திடப்

பெய்வகை கூடிப் பிரிவதுஞ் செய்யும்

116 நிலநீர் தீக்காற் றென நால் வகையின்

 

108-116 ஆசீவக நூல்களைப் பயின்ற புராணனை , உன்னுடைய

தலைவன் யார் அவன் கூறும் நூற்பொருளை எடுத்

துரை என மணிமேகலை கேட்டாள் . அதற்குப் புராணன் ,

மற்கலி என்றவன் . ( எம்தலைவன் ) எழுதிய நூலின்

பொருள் இதுவெனப் பின்வருமாறு கூறினான் .3

வரம்பில்லாத அறிவினையுடைய ( நமது ) தலைவன்

கூறுகின்ற நூற்பொருள்கள் ஐந்து . எல்லையில்லாத

பொருள்களில் எங்கும் எப்போதும் நீங்காமல் இவை

விளங்கிக் கொண்டிருக்கின்றன . ( அவையாவன ) திண்

மையைத் தருகின்ற உயிர் என்ற அணுவுடன் , இன்

னும் நால் வகையணுக்களாகும் . உயிர் என்ற அணு

உறுதல் ( தொடுதல் ) காணுதல், உணர்தல்

106  என்ற மூன்றினையும் செய்யும் போது , நிலம் , நீர் , தீ , காற்று

என்ற நால்வகையணுக்களும் சேருகின்ற வகைப்படி

( குறிப்பிட்ட விழுக்காட்டின் படி ) * சேர்ந்து ( பின்னர்

வேண்டியபோது ) பிரிந்து கொள்ளும் .

 

117 மலைமர முடம்பெனத் திரள்வதுஞ் செய்யும்

வெவ்வே றாகி விரிவதுஞ் செய்யும்

119 அவ்வகை யறிவ துயிரெனப் படுமே

117-119 ( இவ்வணுக்கள் ) மலை , மரம் , உடம்பு எனத் திரளவும்

செய்யும் . ( பின்னர் ) தனித்தனியாகப் பிரிந்து விரியவுஞ்

செய்யும் . இவ்வகைச் செயல்களை அறிவது உயிரெனப்

படும் .

 

120 வற்ப மாகியுறுநிலந் தாழ்ந்து

சொற்படு சீதத் தொடுசுவை யுடைத்தாய்

இழினென நிலஞ்சேர்ந் தாழ்வது நீர்தீத்

தெறுதலு மேற்சே ரியல்பு முடைத்தாங்

காற்று விலங்கி யசைத்தல் சடனிவை

125 வேற்றியல் பெய்தும் விபரீ தத்தால்

 

 

120-125 ( இவ்வணுக்களின் இயல்பான தன்மைகளை நோக்கின் )

நில ( அணு ) பணிவாகவும் வன்னமயுடையதாயுமிருக்

கும் . நீர் ( அணு ) சொல்லப்படத்தக்க குளிர்மையுடன்

சுவையினையுமுடையதாயிருக்கும் . இழின் எனும் ஒலியு

நிலத்தையடைந்து , ஆழத்தே சுவறிவிடும் . தீ

( அணு ) எரிக்கும் தன்மையையும் மேன் நோக்கிச் செல்லு

மியல்பையுமுடையது . காற்று ( அணு ) குறுக்கீடாக அசை

யும் தன்மையுடையது . இவை முரண்பட்ட இயல்புகளு

டன் சேரும் போது வேறுபட்ட தன்மையையடையும் .

 

126 ஆதி யில்லாப் பரமா ணுக்கள்

தீதுற் றியாவதுஞ் சிதைவது செய்யா

புதிதாய்ப் பிறந்தொன் றொன்றிற் புகுதா

முதுநீ ரணுநில வணுவாய்த் திரியா

ஒன்றிரண் டாகிப் பிளப்பதுஞ் செய்யா

அன்றியு மவல்போற் பரப்பதுஞ் செய்யா

132 உலாவுந் தாழு முயர்வதுஞ் செய்யும்

 

 

126-132 தொடக்கமில்லாத , அடிப்படையான அணுக்கள் , சிறிதுங்

கெட்டு அழியாதவை . ( இவை ) புதிதாகத் தோன்றி ஒன்

றனுள் ஒன்று உள் நுழைவதில்லை . பழமையான நீரணு

நில அணுவாக மாறுபடாது . ஒரணு இரண்டாகப் பிளவு

றாது . அத்துடன் ( இவை ) அவல்லப்போல் ( தட்டை

யாய் ) பரந்தும் நிற்பதில்லை .

 

 

133 குலாமலை பிறவாக் கூடும் பலவும்

பின்னையும் பிரிந்து தந் தன்மைய வாகும்

மன்னிய வயிரமாய்ச் செறிந்துவற் பமுமாம்

136 வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்

 

 

133-136 இவை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பெயர்ந்து

செல்லவல்லன . கீழ் நோக்கிச் செல்லுதல் , மேனோக்கிச்

செல்லுதல் ஆகிய இயக்கங்களையும் உடையன . (இவை )

ஒன்றன் தொகுதியாகவோ , மலைபோன்ற பிற அணுக்களு

டன் சேர்ந்த தொகுதியாகவோ சேர்க்கையுறும் . சேர்ந்த

அவைகளே பின்பு பிரிந்து தத்தம் ( இயல்பான ) தன்

மையை அடையும் . ( இவை ) சேர்ந்து வயிரமாகிச்செறிந்து

வலிமை பெறும் . மூங்கில் போல உள்ளே துளையுள்ள

பொருளாக முளைக்கும் .

 

137 தேயா மதிபோற் செழுநில வரைப்பா

நிறைந்தவிவ் வணுக்கள் பூதமாய் நிகழிற்

குறைந்து மொத்துங் கூடா வரிசையின்

ஒன்று முக்கா லரைகா லாயுறும்

141 துன்றுமிக் கதனாற் பெயர் சொலப்படுமே

 

137-141 தேயாத சந்திரன் போலச் , செழுமையான இந்நிலப்பரப்

பாக நிறைந்து நிற்கின்ற இந்த அணுக்கள் ( ஐம் ) பூதங்க

ளாக உருவாகும் போது , ( பிற் கூறப்படும் ) அளவிற்

குறைந்தோ , அன்றேல் ஒத்த அளவாகவோ கூடுவ

தில்லை . முறையே , . ஒன்று , முக்கால் , அரை ,

( 1 , 2,1,1 , ) என்ற விழுக்காட்டிலேயே சேரும் . ( இவ்விதச்

சேர்க்கையில் ) எந்த அணு மிகுந்துள்ளதோ அந்த அணு

வின்பெயரைக் கொண்டு அப்பொருள் பெயர் பெறும் .

 

 

142 இக்குணத் தடைந்தா லல்லது நிலனாய்ச்

சிக்கென் பதுவு நீரா யிழிவதும்

தீயாய்ச் சுடுவதுங் காற்றாய் வீசலும்

145 ஆய தொழிலை யடைந்திட மாட்டா

 

 

142-145 இவ்விதப் பான்மையுற்றிருந்தாலன்றி ( அதாவது அணுக்

களின் சேர்க்கையில் ஒரு குறிப்பிட்டளவு அதிகமாக இருந்

தாலன்றி ) இவை நிலமாக வலிமையுற்றிருத்தல் , நீராகிக்

கீழ் நோக்கிச் செல்லுதல் , தீயாகிக் சுடுதல் , காற்றாகி வீசு

தல் ஆகிய தொழில்களைச் செய்யும் ( ஆற்றலை ) அடைந்

திட மாட்டா .

 

 

146 ஓரணுத் தெய்வக் கண்ணோ ருணர்குவர்

தேரார் பூதத் திரட்சியு ளேனோர்

மாலைப் போதி லொருமயி ரறியார்

149 சாலத் திரண்மயிர் தோற்றுதல் சாலும்

 

 

146-149 தனி ஒரு அணுவினைத் தெய்வக் கண்ணுடையோர்

( அதாவது , அறிவுடைய மக்கள் அறிந்து கொள்வர் .

ஏனையவர்கள் பூதமாகச் சேர்ந்து அணுக்கள் இருக்கும்

போது ( ஓவ்வொரு அணுவினையும் தனித்தனி )

அறியமாட்டார்கள் , மாலை நேரத்தில் ( தனியான ) ஒரு மயி

ரைத் தெரிந்து கொள்ள முடியாது . ( ஆனால் ) அவை

திரண்டு இருக்கும்போது தெரிவதையொத்தது இது .

 

 

150 கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும்

பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்

பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்

என்றிவ் வாறு பிறப்பினு மேவிப்

பண்புறு வரிசையிற் பாற்பட்டுப் பிறந்தோர்

155 கழிவெண் பிறப்பிற் கலந்துவீ டணைகுவர்

அழியல் வேண்டா ரதுவுறற் பாலார்

இதுசெம் போக்கி னியல்பிது தப்பும்

158 அதுமண் டலமென் றறியல் வேண்டும்

 

 

150-158 கரும் பிறப்பு , கருநீலப்பிறப்பு , பசும் பிறப்பு , செம்பிறப்பு ,

பொன்பிறப்பு , வெண் பிறப்பு என இவ்வாறு உயிர்கள்

உலகிற் பிறந்தாலும் , தம் தன்மைக் கேற்ப வரிசைப்படி

அவற்றையடைந்து ( ஈற்றில் ) மிகுந்த வெண்மையான பிறப்

பில் வீடுபேற்றையடைவர் . இந்நிலையை அடைந்

தோர்க்கு இங்குமங்கும் அலையும் நிலையில்லை 10 ,இந்தத்

தன்மையே செம்போக்கு எனப்படும் , இந்த இயல்பு

தவறியவர்கள் மண்டல நெறியை அடைந்தவர்கள் என

அறிந்து கொள்ள வேண்டும் .

 

 

 

159 பெறுதலு மிழத்தலு மிடையூ றுறுதலும்

உறுமிடத் தெய்தலுந் துக்கசுக முறுதலும்

பெரிதவை நீங்கலும் பிறத்தலுஞ் சாதலும்

162 கருவிற் பட்ட பொழுதே கலக்கும்

 

 

159-162 ஒன்றைப் பெறுதலும் , இழத்தலும் , இடையூறுகள் ஏற்படு

வதும் , ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைதலும் , துக்கம் ,

சுகம் என்பவற்றை அடைவதும் , பின்னர் அவை விட்டு

நீங்குதலும் , பிறப்பும் , சாவும் எல்லாம் ( ஓர் உயிர் ) கருவிற்

பட்ட பொழுதே கலந்து விடும் .

 

163 இன்பமும் துன்பமும் மிவையுமணு வெனத்தகும்

முன்னுள வூழே பின்னுமுறு விப்பது

165 மற்கலி நூலின் வகையிது வென்ன

163-165 இன்பம் துன்பம் என்ற இரண்டும் கூட அணுவெனக்

கூறத்தக்கவை . முன்னர் வந்து உயிருடன் சேர்ந்த

ஊழே பின்னரும் செயற்படுகின்றது .

 

நியதி என்ற சொல்லின் தமிழ் மொழியாக்கமாக ஊழ்

என்ற சொல்லே கையாளப்பட்டிருப்பது நோக்கக்குரியது .

 

(தமிழகத்தில் ஆசீவகர்கள் – ரா.விஜயலெட்சுமி )