மாறுகால்தலை...!

மாற்றுக்கருத்தை விதை...!

 

கடந்த 31.01.2023-ம் தேதி ஒரு பிரபல பத்திரிக்கையில் தொல்லியல் ஆர்வலர் சிவரஞ்சனி அவர்களின் கட்டுரை படிக்க முடிந்தது. மõக நல்ல கருத்துதான் எனினும் ஒரு மெய்யியல் தன்மை கொண்ட ஒரு சான்றை வெறும் கல்வெட்டாக மட்டுமே அனுகியதன் விளைவே அது. பூவிலுடையார் மலை என்று அழைக்கப்படும் மலைக்கு அருகில் இருக்கும் தமிழ் கல்வெட்டு கூறும் செய்தியை விவரிக்காது, அதன் சொற்களை மட்டும் உதிர்த்ததில் மீண்டும் அது காலத்தால் பின் தங்கிப் போகிறது. எந்த ஒரு சான்றோட்டங்களும் இன்றி கி.பி.2 என்றும் அதை கணிக்கிறார்.

அது யாருக்கு உரிய இடம் என்பதை அந்த இடத்தின் பெயரே விளக்கிக் கூறுகிறது.

பூவிதால் உடையார் மலை....

இது மறுவிய பெயராகவே காட்சியளிக்கிறது. இச்சொல்லின் உண்மைப் பொருள்

பூ இல் உடையார் மலை

அறிவர் மரபினர் அனைவரும் மலர் (தாமரை) மேல் அமர்ந்தவாறு காட்டுவதே அவர்களது வழக்கம். இதைத் தெளிவாய் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் தன் நூலில் எழுதியிருப்பார். காடிகா எனுமó அறிவுலகத்தில் அவர்கள் நம்பிக்கை கொண்டதே அதன் காரணம் தாமரைப்பூ அறிவின் குறியீடு. இதையே திருக்குறளும்,

                “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தான்

                நிலமிசை நீடு வாழ்வான்.

மலரின் மேல் (மிசை என்பது ஓங்கி, மேலேறிய எனும் பொருளில் அமைந்த சொல் எ.கா.மீமிசை ஞாயிறு)

ஏறியிருக்கும் அறிவரின் வழி நடப்போர் நிலத்தின் மேல் உயர் புகழ் பெற்று நீடுழி வாழ்வார் என்று கூறுகிறது.

இன்பத்துறையில் தருக்க முறையில் அமைந்த குறளான

தாம் வீழ்வார் மென்தான் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.

என்பது கூட காதலியின் தோள்களிலó காயும் இன்பத்தை விடவா தாமரையின் மீது இருப்பவன் உலகம் இனிது என்று கேட்கிறது. இதில் கண்ணான் எனும் சொல்லை பவர் கண்ணனுடைய உலகம், இந்திர உலகம், மேல் உலகம் என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார்கள். இதை அறிவது மிகக் கடினம் எல்லாம் அல்ல.. தமிழ் இலக்கண முறையில் உள்ள ஏழாம் வேற்றுமைத் தொகையான கண்எனும் சொல்லை அறிந்தால் அதன் பொருள் எளிமையாம்.

                மதிலின் கண் பூனை-என்பது மதிலின் மேல் உள்ள பூனையே ஆகும். தேவலோக மதிலில் உள்ள பூனை என்று ஆகாது.

இதையே தொல்காப்பிய சூத்திரம் (565-566)

ஏழாகுவதே

கண் எனப் பெயரிய

வேற்றுமைக் கிளவி (505)

கண் கால் புறம் அகம் மேல் உழை..

அதன் பால (566)

-              என்று தெளிவாய் விளக்குகிறது.

எனவே பூ இல் உடையர் மலை என்பது அந்த மலையில் இருந்த தாபதர் ஒருவர் பூவின் மேல் உயர்த்தப்பட்டதையே தெளிவாய் உணர்த்துகிறது. எனில் யார் அந்த அறிவர்..? அதைத்தான் அந்தக் கல்வெட்டு விளக்குகிறது. இக்கல்வெட்டை ஆராய்ந்த சிவரஞ்சனி அவர்கள் கொடுக்கப்பட்ட சொற்களின் வழிவகையில் தேடாமல், அவர் முறையில் பதம் பிரித்துக் கூறுகிறார். அந்தக் கல்வெட்டை திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள்

                “வெண் காசிபன் கொடுபித கல் கஞ்சனம்என்று படித்துள்ளார். அதற்கு பொருளாய் கசிந்து ஒழுகும் மேற்கூரைக்கு தாரை அமைத்துக் கொடுத்தது எனும் பொருளில் சல தாரைஎன்கிறார் எனக் கூறி அதை ஏற்றுக் கொண்ட வழியிலே கல்வெட்டில் உள்ள காஞ்சனம்/கஞ்சனம் என்ற சொல்லை கஞ்சம் + அணம் எனப் பிரிக்கிறார்.

                கழகத் தமிழ் அகராதியில் கஞ்சம் என்ற சொல்லுக்கு நீர் என்ற பொருள் உள்ளதாகவும், அணம் என்பது குகையினó மேற்பகுதி என்றும், எனவே ஐராவதம் மகாதேவன் ஐயா கூறியது போல இது நீóர் கசிந்து ஒழுகும் குகையின் மேற்கூரைக்கு தளம் அமைத்தது என்கிறார்.

                இது எப்படி உள்ளதென்றால் சட்டை என்பதற்கு சட்+டை சட் என்றால் உருதுமொழியில் கொட்டு என்ற பொருளும், டை என்றாலó ஆங்கிலத்தில் மடி என்ற பொருளும் வருவதால் அந்தச் சொல்லிற்குப் பொருள் கொட்டிக் கொண்டே மடி என்பது போலாகும்.  இதையே தொல்காப்பியர்

                தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் எனும் குற்றமாகக் கூறுகிறார். (1611)

முதலில் அந்தக்கல்வெட்டை யாரெல்லாம் எப்படிப் படித்தார்கள் என்று பார்ப்போம்.

    ஒரு அடி உயரமும், பதினோறு எழுத்துக்களைக் கொண்ட இக்கல்வெட்டை எச்.கிருஷ்ணசாஸ்திரி.

வேணகோஸி பானா குடுபிதக்  (ளா) கா ஞ சணானஎன படித்து சமஸ்கிருத சொல்லோடு ஒப்பிட்டார்.

பின் கே.வி.சுப்பிரமணிய ஐயர்

வேண் கோஸிபான் குடுபிதா

காள காஞ்சணம்

எனப் படித்து அவர் வேண் நாட்டுவேளிர் என்றார்.

பின் திரு.நாராயண ராவ்

வேணó கோஸிபான குட்டுபிதா

காள காஞ்சனம்என்று

படித்து சமஸ்கிருத முறையில் ஆய்ந்து பௌத்த விநய பீடகத்தைச் சேர்ந்த ஒருவரால் செய்யப்பட்டது என்றார்.

பிறகு டி.வி.மகாலிங்கம் அவர்கள் படித்து

வேண் கோஸிபன் குட்டுபித கல் கஞ்சனம்” –இது

வேண் காஸிபனால் தானமாக கொடுக்கப்பட்ட கல் படுக்கை என்றார். இந்த குகைத்தளங்கள் எல்லாம் ஆசீவர்களுக்கு உரியவை என்று முதலில் உரைத்தவரும்  இவரே.

அதன் பிறகே ஐ.மகாதேவன் அவர்கள்

வேண் காஸிபன் கொடுபித

கல்காஞ்சணம்”-எனப் படித்து

வேள் காசிபனால் கொடுக்கப்பட்ட

கல் படுக்கை என்றார்.

இவை எல்லாம் இருக்க இதைப்பற்றிய

தெளிவான ஆய்வினை செய்தவரில் ஒருவர்

திரு மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள்

அவர் இக்கல்வெட்டை    

வெண் காசிபன் கொடுபித கல் கஞ்சனம்

என்று படித்து, பிராமி (தமிழி)

எழுத்தில் எகரமும், ஓகாரமும் பொதுவாய் ஒரே போன்று எழுதப்படுவதால்

இதை வெண் என்று படிப்பதே இங்கு சாலச் சிறந்தது என்கிறார். மேலும் காஞ்சனம் எனும் சொல் பிராகிருத சொல் எனவும், அது படுக்கையை குறிக்கிறது என்கிறார். வெண்காசிபன் என்பவர் முனிவர்களுக்காய் கொடுத்த கற்படுக்கைகள் என்று கூறுகõறார்.

                மேலும், ஓய்வு பெற்ற, மறைந்த தொல்லியல் இயக்குனர் ரா.நாகசாமி அவர்களும் அதை வெண்காசிபன் என்று படித்தது குறிப்பிடத்தக்கது.

                -இவ்வாறு காஞ்சணம் என்றும், சொல் பாலி, பிராக்கிருத வழக்கில் இருந்து, இங்கு கற்படுக்கையைக் குறிப்பதாய் அனைவரும் கூற, சிவரஞ்சனி அவர்கள் அதை நீர்க்கசிவிற்காய் அமைந்தகó கூரை என்று குறிப்பிடுவது விந்தையாய் உள்ளது.

                அப்படி அது நீர்க்கசிவு கூரையைத்தான் குறிக்கிறது என்றால் தமிழகத்தில் கிடைக்கும். தமிழக்கல்வெட்டுகள் உடைய, படுக்கைகள் கொண்ட பல குகைகளில் இந்த மழைவெட்டு எனும் அணம் வெட்டப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டுகள் எதிலும் காஞ்சணம் என்ற சொல் இல்லையே, கொட்டுவிக்க மறந்து விட்டார்கள் போலும்…....

                இந்தக் காஞ்சனம் எனும் சொல்லுக்கு The pali text society ன் pali to English-அகராதி பொன் என்றே பொருள் கூறுகிறது.

Kancanna vanna -எனும் சொல்லுக்கு பொன் நிறம் என்ற பொருளைத் தருகிறது.

                மேலும், பகவத்கீதையின் அத்யாயம் 6, சூக்தம்-8

                ஞான விஜ் ஞானத்ரூப்தாத்மா.... அஷ்ம காஞ்சன- எனும் பாடலில் கூட அஷ்ம என்பது கல்லையும், காஞ்சன என்பது பொன்னையும் குறிக்கிறது.

                மேலும், சைவ சித்தாந்த அகராதி காஞ்சனம் எனும் சொல்லுக்கு பொன் என்ற பொருளையே தருகிறது.

                சூடாமணி நிகண்டும் கூட காஞ்சனம் எனும் சொல்லுக்குப் பொன் என்ற பொருளையும், மேலும் கீழ்கண்ட சொற்கள்

காஞ்சன மாலா -      பொன்மாலை

காஞ்சன வல்லி -      பொற்கொடி

என்ற பொருளையும் தருகிறது இவைகளின் மூலமó தெளிவாய் அறிவது காஞ்சனம், கஞ்சனம் எனும் சொற்கள் பொன்னைக் குறிக்கிறது என்பதே.

மக்கள் வழக்கிலó பிராக்கிருத, பாலி சொற்கள் கலந்த போது ஏற்பட்ட மாற்றமாய் இருக்கலாம். சாண்டில்யன் எழுதிய கடல் புறா-எனும் புதினத்தில் கூட இளைய பல்லவனின் நாயகியாக வருபவர் காஞ்சனை என்பவர் தான். கள ஆய்வில் காஞ்சன் பாண்டியன் எனும் மாணவனைக் காண முடிந்தது. அவரிடம் காஞ்சன் என்ற சொல்லிற்கு பொருள் கேட்ட போது அவர் பெற்றோர் பொன் என்று கூறியதாய் விவரித்தார். பொன் பாண்டி எனும் பெயரில் மக்கள் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும், அடுத்தபடியாக வெண்காசிபன் எனும் பெயருக்கு வெண்மையான பிரகாச ஒளியுடையவன் எனும் பொருளைக் கூறுகிறார். பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைக் கொண்டிருந்த இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் பொத்தாம் பொதுவாக வெண்மை என்பதை ஒரு நிறமாகப் பார்ப்பது, இங்கு வேர் விட்டிருந்தக் கோட்பாடுகளை ஆயாததே ஆகும்.

சங்க இலக்கியங்களை நற்றிணை, குறுந்தொகை, புறம் மற்றும் அகநானூறு அனைத்திலும் வெண் என்ற அடைமொழியை வைத்திருந்தவர்கள் பலரைப் பார்க்கலாம். வெண்ணாகனார், வெண் பூதியார், வெண்மணிப்பூதியார், வெண் கண்ணனார், வெள்ளைக்குடி நானகார், வெண் கொற்றனார், வெண் பூதனார் இவர்களுக்கெல்லாம் வெண் என்ற அடைமொழி பொதுவாய் கொடுத்திருப்தற்குக் காரணம் என்ன? அவர்களெல்லாம் வெண்மையாக ஒளிர்ந்ததாலா…....?

நிறக் கொள்கையை இங்கு கொண்டிருந்தவர்கள் இருவர் அதாவது ஜெயினர் மற்றும் ஆசீவகர்கள். ஜெயினர்களின் கொள்கை, இலேசியக் கொள்கை, அதனாலே சேக்கிழார் அவர்களைக் குறிப்பிடும் பொழுது தலைமயிரைப் பறித்து உண்ணும் சாதி அமணர் என்று குறிப்பால் உணர்த்துகிறார். நிறங்களுக்கேற்ற வேற்றுமை உண்டு.  மேலும் அது பிறப்பால் வருவது என்பதை ஜெயினம் கூறும். ஆனால் ஆசீவகத்தில் உள்ள வண்ணக்கோட்பாடு படிநிலை சார்ந்தது. கருப்பு, கருநீலம், பச்சை, செம்பொன், வெண்-ஆகிய நிறங்கள் மனிதனின் வாழ்வியல் படிநிலைகளைக் கூறுகிறது. ஒரு பள்ளியõல் 2ம் வகுப்பு முடிந்ததும், 3,4 என்று எப்படி கற்றலின் வழி படிநிலை முன்னேறுகிறதோ அதைப் போல ஒவ்வொரு குற்றங்கள் கடந்த பின்பு ஒரு நிறத்தில் இருப்பவர் மற்றொரு நிறத்திற்கு மாறலாம். இதைத் தெளிவாய் தன் நூலை விளக்குவார். முனைவர் ர.விஜயலெட்சுமி அவர்களó இதையே சங்க இலக்கியங்கள் பல்வேறு வண்ணங்களை அடைமொழியாகக் கொண்ட புலவர்களாக அடையாளமிட்டுக் காட்டுகிறது. எனவே இங்கு வெண் காஸி(சி)பனாக காட்டப்பட்டு இருப்பது ஆசீவகத்தின் நிறுவனத்தலைவர்களில் ஒருவரான பூரணக்காயபரே. கி.மு.6-ஆம் நூற்றாண்டு இந்திய சிந்தனை மரபில் ஓர் அறிவுப்புரட்சியை உண்டாக்கிய தருணம். அதில் இருந்த பற்பல சிந்தனைப் பள்ளிகளைப் பற்றி, டி.டி.கோசாம்பி அவர்களும், தேவி பிரசாத் சாட்டோ பாத்யாயாவும் தங்களுடைய ஆய்வு நூல்களில் விளக்கியிருப்பார்கள். அதில் முக்கியப்பங்காக பூரண காயபரையும் அவரின் தற்செயல் கோட்பாட்டை (யத்தேச்ச) பற்றியும், விளக்கியிருப்பார்கள். இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது இவருக்கும் வெண்மைக்கும் உள்ள தொடர்பே ஆகும்.

அங்குதர நிகாயத்தில், சுக்க நிகாயத்தில் (57)-ஆம் சுக்தம் புத்தரிடம் அவரின் சீடரான ஆனந்த புத்தர் உரையாகும் கூற்றைக் காணலாம்.

ஆனந்தர் புத்தரிடம் கூறுகிறார். ஆசீவர்களும் ஆசீவக பிட்சுணிகளும் வெள்ளை சாதியினர் அதில் நந்தவாச்சன், கிசசங்கிசன், மற்கலி மிக வெண்மை (பரம சுக்கில) உடையவர்கள்”.

இந்தக் கூற்றில் கிசசங்கிசன் என்று குறிப்பிடப்படுபவரை காசிபன் (காயபர்) என்று நிறுவுகிறார். ஆய்வாளர் A.L.பாசாம் அவர்கள்.

முழுமை அடைந்த அறிவினை உடையவன் என்பதைக் குறிக்கும் விதமாகவே அவர் பூரணர் என்றும் அழைக்கப்படுகிறார். முழுமை பெற்ற அறிவினை உடையவரானதாலே பௌத்த இலக்கியங்கள் பல இவரைத் தூற்றுகிறது. இதைப்பற்றி ஆய்வு செய்த A.L.பாசாம் அவர்கள் “ திபெத்திய தம்மபதம் மட்டும் திவ்ய வதனம் பூரண காஸிபரின் இறப்பை தூற்றுகிறது . அவர் புத்தரிடம் தோற்று தற்கொலை செய்துகொண்டார் என்று அது விளிக்கிறது “ என்று கூறுகிறார்.அதற்குக் காரணம் இவர் வினை மறுப்புக் கோட்பாட்டைக் கொண்டதே ஆகும். அதன் வடமொழி வடிவம் அக்ரிய வாதம் என்பதால் இதை ஆய்வு செய்யும் தருமானந்த கோசாம்பி பூரண காஸõபனுடைய அக்ரிய வாதம் சாங்கியம் போலவே உள்ளதுஎன விளிக்கிறார்.

                இதில் வரும் காஸிபன் எனும் சொல்லை கல்வெட்டோடு ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டுரையை விளங்கிக் கொள்வதற்கு வழி வகுக்கும். வினை மறுப்புக் கோட்பாட்டை தமிழர் மெய்யியல் கோட்பாட்டாக கொண்டிருந்ததை தொல்காப்பியம் மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

                வினையின் நீங்கி விளங்கிய

அறிவின் முனைவர்-என்று

வினையிலிருந்து நீங்கியவரே அறிவின் முதல்வர் என்று குறிப்பிடுகிறது.

                வடமொழியில் அக்ரிய வாதம் போலவே வினைமறுப்புக் கோட்பாட்டை யதிருச்சவாதம் (யத்தேசவாதம்)-என்கிறது இதைப்பற்றிக் கூறுமó கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சரகத சம்ஹிதை-எனும் மருத்துவ நூல், யதிருச்ச வாதிகளின் மதத்தில் செய்பவர், பொருள், கர்மா, ரிஷி கர்ம பயன்கள் என எதையும் ஏற்றுக் கொள்ளா நாத்திகர்கள், பெரும்பாவிகள் 

                இதில் வரும் கர்ம, கர்ம பயன் எதிர்ப்பு என்பது வினை மறுப்பான தற்செயலைக் குறிப்பதாகும். இவரின் நிறக்கோட்பாடு அபிசாதிஎனும் பெயரில் வடமொழியில் குறிப்பிடப்படுவதையும், அதே நிறக்கோட்பாட்டை ஆசீவகத்தின் முக்கியக் கோட்பாடாகவும் மணிமேகலை, öலகேசி குறிப்பிடுவதை உற்று நோக்க வேண்டும்.

கரும் பிறப்பு, கருநீலப் பிறப்பு,

செம்பிறப்பு………..... வெண்பிறப்பு

என் இவ்வாறு பிறப்பும் மேஷ.

.... கழி வெண்பிறப்பு கலந்து

வீடு அணைகுவர்என்று

காஸிபரின் நிறக் கோட்பாட்டை மணிமேகலை (150) கூறுவதும்,

நீலகேசி, மணிமேகலை இரண்டும் ஆசீவக வாதத்தைக் குறிப்பிடும் பொழுது இரண்டிலும் பூரணரின் பெயரைக் குறிப்பிடுவதும் சாதாரண விஷயம் அன்று.

இதை ஆய்வு செய்யும் ஆய்வாளர் குணா.

கி.மு.6-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பூரணரும், மணிமேகலை மற்றும் நீலகேசியில் வரும் பூரணரும் ஒருவரே என்றுத் தோன்றுவது இயற்கைஎன்கிறார்.

ஆம் மற்கலியின் ஊழ் கோட்பாட்டை விட பூரணரின் தற்செயல் கோட்பாடு ஆசீவகத்தில் உயர்ந்திருந்ததைக் குறிப்பால் உணர்த்துவதாய் நீலகேசியும், மணிமேகலையும் அவரின் பெயரை வைத்தே ஆசீவகப் பள்ளித் தலைவனை அழைக்கிறது.

இதைக் கொண்டு பார்க்கையில் பூரண காயபர் உயர் வெண்மை அடைந்த அறிவர் என்பது முழுமையாய் விளங்குகிறது. கழிவெண் பிறப்பில் கலந்து வீடடைந்ததைக் குறிப்பிடும் விதமாகவே. அந்த மலையும் பூ இல் உடையார் மலை என்று அழைக்கப்படுகிறது. இதைப் பற்றி விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள், அந்த மலையின் மீது மூன்று கற்கள் வைத்து தொடக்கத்தில் ஐயனார் வழிபாடு நடத்தப்பட்டதையும், தற்போது நல்ல வடிவமடைந்த ஐயனார் வழிபாடாய் அது உயர்ந்திருப்பதையும் தன் நூலில் எடுத்துரைத்திருப்பார். அதற்கு ஏற்றார் போல் மலையின் மீது பூலுடைய சாஸ்தா” -திருக்கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள மூலவரும் பூரணை பொற்கலை உடனுறையாக இருக்கும் காயபரே. மூன்று முக்கிய ஐயனார்களில் இருவர் உடனிருப்பவர் (ஒக்கலன், ஒக்கலி எனும் அடுத்த படிநிலை மாணவர்கள்?) பெயர்கள் அடைமொழியாகக் கொண்டிருப்பது இல்லை. எனவே இந்தப் பூரணை பொற்கலை என்பது பூரணன் எனும் அவரின் முழுமை அடைந்தப் பெயரையும், பொற்கலை என்பது அவர் பொன்னால் செய்து கொடுத்தப் பொருளையும் (படுக்கை?) குறிப்பதாய் பார்க்கமுடிகிறது(?).

எனவே பூ இல் உடையார் மலையில் பூலுடையார் சாஸ்தா (பூ இல் உடையார்) ஆக வணங்கப்படும் அறிவர் பூரண காயரே. சாஸ்தா எனும் சொல் சாத்தன்” – எனும் சொல்லின் வடமொழி வடிவமே ஆகும்.

இக்கல்வெட்டில் வரும் ஸி” – எனும் எழுத்தையும், சாஸ்தா வில் வரும் ஸ - எனும் எழுத்தையும் உற்று நோக்கும் போது பாலி, பிராக்கிருத மொழி கலப்பு தமிழில் உண்டானதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அறிவர்களின் சிந்தனைப் பள்ளிகள் வட நாடுகளிலும் செழிப்புற்று இருந்ததாலே இவ்விணைப்பாம்.

மக்கள் வழக்கத்தில்,

அங்கு அவர் கலந்திருப்பதை

                “பொங்கலுமிட்டு தேங்கயும்

                கரும்பும் பூ லா வுடையார்க்குச்

                சாலக் கொடுங்கள்” – எனும்

முக்கூடற்பள்ளின் வரிகள் வெள்ளிடை மலையாய் உணர்த்துகிறது.

எனவே அக்கல்வெட்டு உணர்த்தும் செய்தி ஆசீவக வழக்கத்தில் வெண்மை நிறம் எய்திய பூரண காஸிபன் (காயபர்) பொன்னாலான படுக்கை செய்து கொடுதóது இருக்கிறார் அல்லது படுக்கைகள் செய்வதற்கு பொன் அளித்திருக்கிறார்.

                அது மற்கலியின் நினைவாய் அவர் செய்த படுக்கை என்பதும் அதனாலே பொற்கலை எனும் பெயர் அவர் பெயருடன் மக்கள் வழக்கில் இணைந்தது என்பதும் பேராசிரியர்.க.நெடுஞ்செழியன் ஐயாவின் முடிவு.

                இதன் பழங்காலத்தன்மையை உறுதிபடுத்தும் விதமாக. பல்வேறு வெண்சாநóது ஓவியங்கள் இருப்பதை நண்பர் பாலமுரளி அவர்கள், ஆராய்ந்து உறுதி செய்துள்ளார். இது தாந்திரத்தின் உடனான ஆசீவகத்தின் இணைப்பே ஆகும்.இங்கு கொடுக்கப்பட்டுள்ளப் படங்கள் பாலமுரளி அவர்கள் ஆய்விற்கு சென்ற பொழுது எடுக்கப்பட்டவையே.

பூவிதால் / பூ வில் உடையார்

மலை மாறுகால் தலையில் பல வரலாற்று மற்றும் மெய்யில் தன்மைகளை

உள்ளடக்கியுள்ளது. தமிழ் மெய்யில் உணர்ந்து இளம் ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்களாக.

 

 

 

 

 

 

 

     

 

 

 

 

 

 

-ஹாருன் பாஷா,

தமிழ் மெய்யியல் ஆர்வலர்,

(www.dhamotnptc@gmail.com, 8610780183)

மதுரை.

 

 

சான்று விளக்க நூட்கள்

1.            திருக்குறள் – 3, 1103

2.            தொல் – 565, 566

3.            The caverns &brahmi inscription of southern india – Krishna sasthri.

4.            New Indian antiquary vol 1

5.            corpus of the Tamil – brahmi inscription – R.Nagaswami.

6.            pali text society,s pali – English dictionary 487)

7.            சங்க கால தமிழ்க் கல்வெட்டு எழுத்துகள் மயிலை சீனி வெங்கடசாமி

8.            பகவத் கீதை 6 : 8

9.            சூடாமணி நிகண்டு

10.          கடல் புறா சாண்டில்யன்

11.          நற்றிணை – 248, 285, 313, 375

12.          குறுந்தொகை – 174, 299

13.          அகம் – 130, 170

14.          புறம் – 35

15.          சைவ சித்தாந்த அகராதி - பக் 89 பேரா.அ.கி.மூர்த்தி

16.          தமிழகத்தில் ஆசீவகாóகள் நா.விஜயலெட்சுமி

17.          பகவான் புத்தூர் - டி.டி. கோசாம்பி

18.          உலகாயதம் தேவõ பிரசாதó சாட்டோ பாத்தியாயா

19.          அங்.நிகாயம் சுக்க நிபாதம் (57)

20.          தொல் – 60

21.          சரக சம்ஹிதை அக்னிவேசர்

22.          மணிமேகலை – 150

23.          நீலகேசி - கா.அப்பாத்துரைப்பிள்ளை - பக் 85

24.          வள்ளுவத்தின் வீழ்ச்சி -குணா

25.          ஆசீவகம் எனும் தமிழர் அணுவியம் பேரா.க.நெடுஞ்செழியன்

26.          முக்கூடற்பள்ளு – (33)

27.          தமிழக குகைப் பள்ளிகளின் சமயம் பேரா.க.நெடுஞ்செழியன்

28.          south Indian palaco – graphy – t.v.mahalingam (297)

29.          The history of Ajivikas- A.L.Basham

30.          The doctorins of Ajivikas-A.L.Basham